Our Feeds


Monday, January 10, 2022

ShortNews

இலங்கை செலுத்தவேண்டிய இன்னுமொரு கடன்: அம்பலப்படுத்திய இந்திய ஊடகங்கள்



இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இந்திய மிளகாய் விநியோகஸ்தர்களுக்கான பணம் செலுத்தப்படவில்லை என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இலங்கைக்கான இந்திய இறக்குமதியாளர்கள் நிலுவைத் தொகையை செலுத்தாததால், கடந்த சில மாதங்களாக இந்திய மிளகாய் சந்தையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இந்திய மதிப்பில் 250-300 கோடிக்கு மேல் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கடனை செலுத்தாதது குறித்து இதுவரை முறைப்பாடுகள் எதுவும் பதிவாகவில்லை எனவும், அவ்வாறு முறைப்பாடு தெரிவித்தால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய பணம் கிடைக்காமல் போய்விடலாம் எனவும் விநியோகஸ்தர்கள் அஞ்சுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »