Our Feeds


Friday, January 21, 2022

SHAHNI RAMEES

உயர் தரப் பரீட்சைக் காலப்பகுதியில் ஆரம்ப பாடசாலைகளுக்கு விடுமுறை ?

 

உயர் தரப் பரீட்சைக் காலப்பகுதியில் ஆரம்ப பாடசாலைகளுக்குவிடுமுறை வழங்கல்

உயர் தரப் பரீட்சைக் காலப்பகுதியில் ஆரம்ப பாடசாலைகளுக்குவிடுமுறை வழங்குவது தொடர்பாக கல்வி அமைச்சு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. 
இதன்படி, 2021 க.பொ.த உயர் தரப் பரீட்சை நடைபெறும் 2022.02.07 முதல் 2022.03.05 வரையான காலப்பகுதியை உள்ளடக்கும் வகையில், 2022.02.04 முதல் 2022.03.05 வரையான காலப்பகுதியில் பாடசாலைகள் விடுமுறை வழங்கப்படும் என்றும் இக்காலப்பகுதியில் ஆரம்பப் பிரிவுகளுக்கு விடுமுறை வழங்கப்படமாட்டாது என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. 

இக்காலப்பகுதியில் ஆரம்ப வகுப்பு மற்றும் ஆரம்ப பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படமாட்டாது என்றாலும், பரீட்சையை தொடர்ச்சியாக நடாத்திச் செல்வதற்கு இடைஞலாக அமையும் பாடசாலைகளின் அதிபர்கள் வலயக் கல்விப் பணிப்பாளர் ஊடாக, மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவிக்க வேண்டும். 

இவ்வாறான சந்தர்ப்பங்களில் குறித்த பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறான பாடசாலைகளில் மாற்றுவழிகளில் கற்றலைத் தொடர்வதற்கு நடவடிக்கைகைளை மேற்கொள்ளுமாறும் கல்வி அமைச்சின் செயலாளர் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளார். 

பரீட்சைக் கடமைகளுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் ஆசிரியர்களுக்கு விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »