Our Feeds


Saturday, January 22, 2022

ShortNews

மின் தடையை தொடர்ந்து குடிநீர் விநியோகமும் தடைப்படும் ஆபத்து?



கொழும்பு நகருக்கு தேவையான குடிநீரின் அளவை மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


நீர்த்தேக்கங்களில் உள்ள நீர்மட்டம் குறைந்து வருவதன் காரணமாக இந்நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

களனி கங்கைக்கு நீர் வழங்கும் காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வறட்சியால் குறைந்து வருவதே இதற்கு காரணம் என அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மின் உற்பத்திக்கு அதிகளவான நீர் பயன்படுத்துவதால், குடிநீர் விநியோகத்திற்கும் எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டார். அத்தோடு மின் உற்பத்தியை மட்டுப்படுத்தி குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள வேண்டிய நிலையும் உருவாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.

நீர் மட்டம் குறைந்து வருவதன் காரணமாக, மழை பெய்யவேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »