Our Feeds


Monday, January 3, 2022

SHAHNI RAMEES

இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் பதிவான பகுதிகள்

 

நாட்டில் ஒமிக்ரோன் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுவரை 48 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் மல்காந்தி கல்ஹேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருந்தும், அனுராதபுரம் மாவட்டத்திலிருந்தும் இவ்வாறு ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரோனின் அபாயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் சுகாதார நடைமுறைகளை சரியாக பின்பற்றுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »