Our Feeds


Monday, January 3, 2022

SHAHNI RAMEES

தனியான முஸ்லிம் கூட்டணியை உருவாக்க ஏழு MP க்கள் திட்டம்

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து தனியான முஸ்லிம் கூட்டணியை உருவாக்கத் தீர்மானித்துள்ளனர்.



கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி இரண்டு கட்சிகளின் தலைவர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் மாத்திரமே பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்படவுள்ளனர்.


பாராளுமன்ற உறுப்பினர்களால்  உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. 


கடந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கட்சிகள் ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »