முக்கியமான அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையளில் நாளை (03) இடம்பெறவுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான முதலாவாலு அமைச்சரவை கூட்டமாகவும் இது இடம்பெறவுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில், இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் திறைசேரி செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல ஆகியோரை அமைச்சரவை கூட்டத்துக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் நாளைய அமைச்சரவை கூட்டத்தில் இருவரும் பங்கேட்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதற்கமைய,நாடு தற்போது எதிர்நோக்கும் பொருளாதார சவால்கள் மற்றும் முன்னோக்கி செல்லும் வழிகள் குறித்து நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த இரண்டு அமைச்சரவைக் கூட்டங்களின் போது, ரூபாவின் பெருமதியை அதிகரிக்க வேண்டியதான் அவசியம் குறித்தும், தற்போதைய நெருக்கடிகளுக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) உதவி பெறுவது குறித்தும் அமைச்சரவை அமைச்சர்கள் விவாதித்தனர்.
“நாளைய அமைச்சரவைக் கூட்டம் தீர்க்கமானதாக இருக்கும், ஏனெனில் பொருளாதாரம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்க்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவுள்ளதாக” அமைச்சரவை அமைச்சரொருவர் கூறினாா்.