அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (25) ஐக்கிய தேசியக் கட்சியினால் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று காலி பிரதான பஸ் தரிப்பிடத்துக்கு அருகில் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்ததுடன் அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரா்களான வஜிர அபயவர்தன, பாலித்த தெவரப்பெரும் உள்ளிட்ட பலர் பங்குப்பற்றியிருந்தனா்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட நிர்வாகத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு கோரி இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.