Our Feeds


Monday, January 3, 2022

ShortNews

பிரதமர் மஹிந்த பதவி விலகவுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை - பிரதமர் அலுவலகம் அறிக்கை.



பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா செய்யப்போவதாக ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் கடந்த சில தினங்களாக வெளியான தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என பிரதமர் அலுவலகம் இன்று விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாட்டு மக்களை தவறாக வழிநடத்தும் இத்தகைய பிரச்சாரங்களை நிராகரிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட மேற்படி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »