Our Feeds


Monday, January 3, 2022

ShortNews

ஜனாதிபதியை அவமதிக்கும்படி செயற்பட்டால் சட்ட நடவடிக்கை - பொலிஸ் பேச்சாளர் அறிவிப்பு



ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களிலோ அல்லது வேறு ஊடகங்களிலோ அறிக்கைகளை வெளியிடவோ அல்லது பரிமாறிக்கொள்ளவோ ​​முடியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.


அவ்வாறு செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் உண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் செயற்பட்டதாக கூறி, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தன்னிடம் விசாரணை நடத்தியதாக, ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பெண் ஒருவர் தெரிவித்தமை குறித்து விளக்கமளிக்கையில், பொலிஸ் பேச்சாளர் இதனைக் கூறியுள்ளார்.


சமூக ஊடகங்களில் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டமை தொடர்பாக தன்னிடம் இருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பெற்றுள்ளதாக அப்பெண் தெரிவித்துள்ளார். 


மப்ரூக்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »