Our Feeds


Thursday, January 6, 2022

SHAHNI RAMEES

ஆண்டின் முதலாவது ஏவுகணை சோதனையை ஆரம்பித்து வைத்ததது வட கொரியா

 

500 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணையை இந்த ஆண்டின் ஆரம்பத்தில்  வடகொரியா பரிசோதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு ஆசிய நாடான வட கொரியா, பல்வேறு நவீன ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதன் வாயிலாக, அண்டை நாடான தென் கொரியாவை அச்சுறுத்தி, அதன் நட்பு நாடான அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை நீக்க வட கொரியா முயற்சித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதையடுத்து, அமெரிக்காவும் சற்று இறங்கி வந்தது. நிபந்தனையின்றி பேச்சு நடத்த விரும்பும் வட கொரியா, அமெரிக்காவின் அழைப்பை நிராகரிக்கும் வகையில் மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளது. இந்த ஏவுகணை 500 கி.மீ., தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.

புத்தாண்டில் முதன்முறையாக ஏவுகணையை வடகொரியா வெற்றிகரமாக சோதித்துள்ளதாக கூறப்படுகிறது. வடகொரியா ஏவுகணை சோதனைகளை செய்து வருவது வருத்தம் அளிப்பதாக ஜப்பான் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »