(இராஜதுரை ஹஷான்)
இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டமை எதிர்கால அரசியலுக்கு சிறந்த ஆசிர்வாதமாக அமையும். மக்கள் ஆதரவுடன் நாடாளுமன்றுக்கு தெரிவானேன். ஒருமுறை கூட தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லவில்லை. மூன்று ஜனாதிபதிகளின் நிர்வாகத்தின் கீழ் முக்கிய அமைச்சு பதவிகளை வகித்துள்ளேன். இராஜாங்க அமைச்சு பதவி நீக்கப்பட்டமை பெரியதொரு விடயமல்ல என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார்.
மேலும் 20 ஆவது திருத்தத்தின் ஊடாக பிரதமரை நீக்கும் அதிகாரம் கூட ஜனாதிபதிக்கு உள்ளது. எனவே அந்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்த முடியாது என்றாலும் பெரும் அரசியல் திருப்புமுனைக்கு வழிவகுக்கும் என்பதில் ஜயமில்லை எனறும் குறிப்பிட்டார்.
தொலைநோக்கு கல்வி இராஜாங்க அமைச்சிலிருந்து வெளியேறுகையில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஊடகவியலாளர்கள் வினவிய கேள்விக்கு அவர் வழங்கிய பதிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.