Our Feeds


Wednesday, February 16, 2022

ShortNews

குளத்தில் மூழ்கி 13 மற்றும் 14 வயதுடைய சிறுமிகள் இருவர் உயிரிழப்பு!

 

குருநாகல்-வில்பாவ குளத்தில் நீராடச் சென்ற இரு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று (15) மாலை குளத்துக்கு நீராடச்சென்ற 4 சிறுமிகள் நீரில் மூழ்கியபோது, பிரதேசவாசிகளால் அவர்கள் மீட்கப்பட்டனர்.

பின்னர், அவர்களில் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த மூவர் சிகிச்சைகளுக்காக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றுவந்த இரு சிறுமிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த 13 மற்றும் 14 வயதுடைய சிறுமிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »