வவுனியா-அனுராதபுரத்துக்கு இடையிலான புகையிரத சேவைகள் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் 5 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட உள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு புகையிரத பொது முகாமையாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தண்டவாளங்களில் திருத்தம் மேற்கொள்ள உள்ளதால் இவ்வாறு 5 மாதங்களுக்கு புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.