Our Feeds


Tuesday, February 15, 2022

ShortNews

இன்றைய வானிலை முழு நிலவரம் (15.02.2022)

 

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களில் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரதானநகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்

அனுராதபுரம் - அடிக்கடி மழை பெய்யும்

மட்டக்களப்பு - அடிக்கடி மழை பெய்யும்

கொழும்பு - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

காலி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

யாழ்ப்பாணம் - - சிறிதளவில் மழை பெய்யும்

கண்டி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

நுவரெலியா - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

இரத்தினபுரி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

திருகோணமலை - சிறிதளவில் மழை பெய்யும்

மன்னார் - சிறிதளவில் மழை பெய்யும்

(வளிமண்டலவியல் திணைக்களம்)


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »