Our Feeds


Wednesday, February 16, 2022

SHAHNI RAMEES

2 நாட்களுக்கு மேலாக காய்ச்சலா? சுகாதார பிரிவு கடும் எச்சரிக்கை!

 

ஒமிக்ரொன், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் என்பன சமூகத்தில் மிக வேகமாக பரவி வருவதை அவதானிக்க கூடியதாகவுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதனால் 48 மணிநேரங்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளுமாறு அவர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

இன்றைய நாட்களில் சமூகத்தில் ஒமிக்ரொன் மற்றும் டெங்கு காய்ச்சல் ஆகியவற்றினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவித்த அவர், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்கள் தமக்கு எந்த வகையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்ற முடிவுகளை தாமாக எடுத்துக் கொள்கின்றனர் எனவும் ஆனால் மருத்துவ உதவியை நாடுவதே சிறந்த தெரிவாக அமையுமெனவம் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »