அடுத்துவரும் 3 வருடங்களில் 7 மாகாணங்களை உள்ளடக்கிய 66 பாலங்களை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
குவைட் அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் குறித்த பாலங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் பழைய பாலங்களுக்கு பதிலாக புதிய பாலங்களை நிர்மாணித்தல் மற்றும் குறுகலான பாலங்களை விரிவுபடுத்துவதன் மூலம் பயணிகளின் பயண நேரத்தை குறைத்து, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வாய்ப்பு ஏற்படுவதாகவும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் குறிப்பிட்டார்.