Our Feeds


Wednesday, February 9, 2022

SHAHNI RAMEES

சுகாதார சேவையாளர்களின் பணிப்புறக்கணிப்பு 3 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது!

 

வேதன உயர்வு உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்னிறுத்தி 18 சுகாதார சேவைகள் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்துள்ள தொடர் பணிப்புறக்கணிப்பு 3 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுடன் சுகாதார தொழிற்சங்கங்கள் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் நிறைவடைந்தநிலையில், தமது பணிப்புறக்கணிப்பினை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

வேதனப் பிரச்சினை உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்னிறுத்தி தாதியர்கள், துணை மருத்துவர்கள், பொது சுகாதார உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 18 சுகாதார தொழிற்சங்கங்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.

தமது கோரிக்கைகளுக்கான உரிய தீர்வு கிடைக்கும் வரையில் தொழிற்சங்க போராட்டத்தினை கைவிடப்போவதில்லையென சுகாதார சேவையாளர்களின் தேசிய சம்மேளனம் அறிவித்துள்ளது.

சுகாதார சேவையாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பல வைத்தியசாலைகளின் சேவைகள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளுக்கு சென்றிருந்த நோயாளர்கள் நேற்றும் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »