அவசர திருத்தப்பணிகள் கொழும்பின் சில பகுதிகளில் இன்று காலை 10 மணிமுதல் 36 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (19) இரவு 10 மணிவரை இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கொழும்பு 1, 07, 09, 10 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படவுள்ளதோடு, கொழும்பு 08 மற்றும் 11 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.