மேல்மாகாணத்துக்குள் சுகாதார விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றவா என்பது தொடர்பில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை 6, 000க்கும் மேற்பட்ட நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய 629 பொலிஸ் உத்தியோகத்தர்களால் 2,904 மோட்டார் சைக்கிள்களும் 1,771 முச்சக்கர வண்டிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதேபோன்று 6,109 நபர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, இவர்களில் 993 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் இவ்வாறான சோதனைகளை முன்னெடுத்து, சுகாதார விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.