வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள கைதிகள் இருவரும் விடுதலைப் புலிகள் அமைப்பின் சந்தேகநபரொருவரும் உயர் தரப் பரீட்சைக்கு தோற்றுவதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
38, 43, மற்றும் 46 வயதுடைய மூவரே பரீட்சைக்கு தோற்றியுள்ளனா். புதிய மெகசின் சிறைச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை மத்திய நிலையத்தில் இவர்கள் பரீட்சை எழுதுவதாக சிறைச்சாலை திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.