குவைத் நாட்டை சேர்ந்த அவாதி என்ற 14 வயது சிறுவன், துபாயில் இடம்பெற்ற 50 நாடுகள் பங்குபற்றும் டென்னிஸ் போட்டியில், காலிறுதி போட்டியின் போது, இஸ்ரேல் அணி வீரருடன் விளையாட மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த விடயமானது சர்வதேச அளவில் பெரும் பேசு பொருளாக அமைந்துள்ளது. இச் சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிவதாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன. இந் நிராகரிப்பின் மூலம் அச் சிறுவன், தான் இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்கவில்லை, இஸ்ரேல் ஒரு அங்கீகரிக்க கூடிய நாடல்ல என்பதை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தியுள்ளான்.
அச் சிறுவன் அப் போட்டியில் வென்றிருக்கலாம் அல்லது தோல்வியுற்றிருக்கலாம். அதுவல்ல விடயம். யார் வென்றாலும், தோற்றாலும் இஸ்ரேல் தன்னால் அங்கீகாரம் பெற்றுவிடக் கூடாது என்பதே அச் சிறுவனின் உறுதி. இதுவல்லவா இஸ்லாமிய தாயின் மார்பில் பாலருந்திய சிறுவனின் துணிவு. அற்ப சலுகைகளுக்கு எமது சமூகத்தை அடமானம் வைக்க துணிந்தவர்கள், இந்த சிறுவனின் பாடம் கற்க வேண்டும். இதனை மனதாற பாராட்டும் சிலர், இதனை ஒத்த சில விடயங்களில் எதிர் நிலைப்பாட்டில் உள்ளமையே சுயநலத்தின் வெளிப்பாடாகும்.