Our Feeds


Tuesday, February 1, 2022

SHAHNI RAMEES

தொடர்கிறது முட்டை வீச்சு சம்பவங்கள் | கொழும்பு மாநகர சபையில் குளறுபடி

 



கொழும்பு மாநகர சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் பிரதீப் ஜயவர்தன மீது, நேற்று (31) காலை மாநகரசபையில் வைத்து, மிளகாய்த்தூள் கலந்த கூழ் முட்டைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் சுற்றாடல் குழுவின் தலைவரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு மாநகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

வாக்கெடுப்பின் பின்னர் மிளகாய்த்தூள் கலந்த கூழ் முட்டையால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் ஒருவரே தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுற்றாடல் மற்றும் காணி குழுவின் தலைவர் பதவிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதீப் ஜயவர்தனவும் அதே கட்சியின் சமன் அபேகுணவர்தனவும் போட்டியிட்டனர்.

இதில் பிரதீப் ஜெயவர்த்தன வெற்றி பெற்ற நிலையில், சமன் அபேகுணவர்தன தோல்வியைத் தாங்க முடியாத உறுப்பினரொருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேயர் ரோசி சேனாநாயக்க மற்றும் கறுவாத்தோட்ட பொலிஸில் பிரதீப் ஜயவர்தன முறைப்பாடு செய்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »