Our Feeds


Tuesday, February 1, 2022

SHAHNI RAMEES

எச்சரிக்கை! | நாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களை தாக்கும் கொவிட்-19 தொற்று உறுதி

 

நாட்டில் 500 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் குடும்பநல பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை குறிப்பிட்டுள்ளார்.


 

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தொற்று உறுதியாகின்றமை தற்போது அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


 
கடந்த காலங்களிலும் கொரோனா தொற்றுக்கு இலக்காகிய பல கர்ப்பிணித்தாய்மார்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »