Our Feeds


Tuesday, February 1, 2022

ShortNews

துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க நடவடிக்கை! | விசேட கலந்துரையாடல் இன்று

 

சுங்கத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பில் மத்திய வங்கி ஆளுநருடன் இன்று (01) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

உரிய கொள்கலன்களை விடுவிப்பதற்கு தேவையான டொலர் கையிருப்பை பெற்றுக் கொள்வது தொடர்பில் மத்திய வங்கி ஆளுநருடன் கலந்துரையாடி வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நேற்றிரவு (31) தெரண தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 360 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »