எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க இலங்கை மின்சார சபை அனுமதி கோரியுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும் இதுவரை இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
மின்சார நெருக்கடி தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் மின்சார அதிகார சபை அதிகாரிகளுக்கு இடையில் இன்று கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான முடிவுகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.
இதனிடையே கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்திலுள்ள 270 மெகாவோட் மின்பிறப்பாக்கி மற்றும் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திலுள்ள 130 மெகாவோட் மின்பிறப்பாக்கி ஆகியவை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலிழந்துள்ளதாக ஜனக ரத்நாயக்க, முன்னதாக அறிவித்திருந்தார்.
இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மின்சாரத் தடைகள் ஏற்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.