எனது அசைமென்டைக் கொடுக்கவே நான் வந்தேன். நான் கவலைப்படவில்லை. ஹிஜாப் அணிந்ததினால் கல்லூரிக்குள் என்னை அனுமதிக்கவில்லை. என்னை நோக்கி ஜெய் ஸ்ரீராம் என கோஷம் எழுப்பினர். அதனால் நானும் அல்லாஹூ அக்பர் என கூற ஆரம்பித்தேன். என் நண்பர்கள் எனக்கு துணையாக இருந்தனர்.
என ஹிஜாபுக்கு எதிராக ஜெய் ஸ்ரீராம் கூறி சுற்றிவலைத்த காவித் துண்டு அணிந்த இளைஞர்களுக்கு எதிராக பேசி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ள சகோதரி ஊடகங்களுக்கு பேட்டி.
