Our Feeds


Saturday, February 12, 2022

SHAHNI RAMEES

மாலைதீவு பிரஜைக்கு ஆயுள் தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்றம்!

 

மாலைதீவு பிரஜை ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

265 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த குற்றத்துக்காக அவருக்கு குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைகளை நேற்று (11) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டது.

மாலைதீவு பிரஜையான லத்தீப் இஷூன் என்பவருக்கே இவ்வாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்த தண்டனையை விதித்துள்ளார்.

மேலும், மேற்படி நபருடன் கைதான மற்றுமொரு சந்தேகநபரை நிரபராதியாக கருதி விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »