Our Feeds


Saturday, February 12, 2022

SHAHNI RAMEES

சட்டவிரோத மின் இணைப்பில் சிக்கி இருவர் உயிரிழப்பு!

 

இரத்தினபுரி-பெல்மதுளை-பட்டலந்தை பகுதியில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பயிர்ச்செய்கை நிலமொன்றில், அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத மின் இணைப்பில் சிக்கி இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சட்டவிரோத அகழ்வுப் பணியில் ஈடுபடுவதற்காக சென்றபோது, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்கள் பட்டலந்தை பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 38 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »