Our Feeds


Wednesday, February 9, 2022

ShortNews

நானே ஹிஜாப் அணிய வேண்டும் என பல முறை சிந்தித்துள்ளேன் - ஹிஜாபுக்கு ஆதரவாக கொதிக்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்



தன்னை தவறாக பலரும் விமர்சனம் செய்யும் போதெல்லாம் முஸ்லிம் பெண்களைப் போல் தானும் உடலை மறைக்கும் ஆடை அணிந்து சென்றால் எந்தப் பிரச்சினைகளும் வராது என பல சந்தர்பங்களில் முடிவெடுத்ததாக “சொல்வதெல்லாம் உண்மை” புகழ் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 


இந்தியாவின், கர்நாடக மாநிலத்தில் இடம் பெற்று வரும் முஸ்லிம் மாணவிகளின் ஹிஜாபுக்கு எதிரான போராட்டம் தொடர்பில் கண்டிக்கும் போதே லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 


அவர் தொடர்ந்தும் பேசுகையில், முஸ்லிம் மாணவிகளின் ஹிஜாப் ஆடைக்கு எதிரான போராட்டங்கள் நிறுத்தப்படா விட்டால் தானும் ஹிஜாப் அணிந்து முஸ்லிம் மாணவிகளுக்கு ஆதரவாக களமிறங்குவேன் என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »