Our Feeds


Sunday, February 6, 2022

SHAHNI RAMEES

டொலர் நெருக்கடி? அரச புத்தகங்கள் உள்ளிட்ட அச்சிடும் பணிகள் கடுமையாக பாதிப்பு!

 

அரச புத்தகங்கள் உள்ளிட்ட அச்சிடும் நடவடிக்கைகளுக்காக அரசாங்க அச்சக திணைக்களத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட அச்சு கடதாசிகள் அடங்கிய 8 கொள்கலன்கள் டொலர் கிடைக்காத காரணத்தினால் கொழும்பு துறைமுகத்தில் சில காலமாக தேங்கியுள்ளது.

இதன் காரணமாக அரசாங்கத்தின் அச்சிடும் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

தற்போது 6 மாதங்களுக்கு போதுமான அச்சுக் கடதாசிகள் மட்டுமே அரச அச்சகத் திணைக்களத்திடம் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

திறைசேரியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும், இதுவரையில் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக எதிர்காலத்தில் அச்சிடும் பணிகளில் பெரும் சிக்கல் நிலை உருவாக வாய்ப்புள்ளதாகவும் குறித்த திணைக்கள அதிகாரிகள் கூறுகின்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »