Our Feeds


Saturday, February 5, 2022

ShortNews

பெற்ற தந்தையை கொலை செய்த மகன் - ராகலை பொலிஸ் பிரிவில் அதிர்ச்சி



இராகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டெல்மார் தோட்டத்தில் மகனின் தாக்குதலுக்கு இலக்காகி தந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


உயிரிழந்த தந்தையின் சடலத்தினை இராகலை பொலிஸார் இன்று (05) காலை மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 62 வயதான ஒரு பிள்ளையின் தந்தையான சுப்பிரமணியம் செல்வநாயகம் எனவும் இராகலை டெல்மார் மேல் பிரிவைச் சேர்ந்தவர் என கண்டரியப்பட்டுள்ளது

நேற்று இரவு தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட வாய்தர்க்கம் கைகலப்பாக மாறியதால் மகன் தந்தையினை இரும்பு ஒன்றினால் தாக்கியுள்ளார் தாக்குதலுக்கு இலக்கான தந்தையின் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டதையடுத்து அதிக இரத்த போக்கு காரணமாக வீட்டிலேயே உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

டி.சந்ரு செ.திவாகரன்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »