Our Feeds


Sunday, February 6, 2022

ShortNews

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கையெழுத்து வேட்டை – சுமந்திரன் அதிரடி அறிவிப்பு



பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக மலையகம் உட்பட நாடு முழுவதும் கையெழுத்து வேட்டையை முன்னெடுப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


அண்மையில் பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

எவ்வாறாயினும் பயங்கரவாத திருத்தச் சட்டத்தில் எந்த சீர்திருத்தமும் இடம்பெறவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தநிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கையெழுத்து போராட்டத்தை முன்னெடுப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »