Our Feeds


Wednesday, February 16, 2022

ShortNews

அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்த வர்த்தக நிலையம் சுற்றிவளைப்பு!

 

அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்த அநுராதபுரத்திலுள்ள விற்பனை நிலையமொன்று, நுகர்வோா் விவகார அதிகார சபையினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

நுகர்வோா் அதிகாரசபையின் அநுராதபுரம் காரியாலயத்துக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 200 சீமெந்து மூடைகள் கைபற்றப்பட்டதாக நுகர்வோா் விவகார அதிகாரசபையின் அநுராதபுரம் மாவட்டத்துக்கு பொறுப்பான விசாரணை அதிகாரி பீ.எஸ்..சீ.பீ. பெரேரா தெரிவித்துள்ளாா்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »