Our Feeds


Monday, February 7, 2022

SHAHNI RAMEES

நாட்டின் உண்மையான பிரச்சினை கடன் நெருக்கடியே தவிர கொவிட் நெருக்கடி அல்ல – உதய கம்மன்பில.

 

தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்டதல்ல கடனால் ஏற்பட்டது என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக காணப்பட்ட இந்த பொருளாதார பிரச்சினை எதிர்வரும் 5 ஆண்டுகளில் பாரியளவில் வெளிப்படவிருந்தது. எனினும், கொவிட்-19 தொற்று காரணமாக முன்னதாகவே வெளிப்பட்டு விட்டது.

வருடமொன்றில் ஏற்றுமதி வருமானத்திற்கும், இறக்குமதி செலவீனத்திற்கும் இடையில் 8 பில்லியன் அமெரிக்க டொலர் இடைவெளியுள்ளது.

எனவே, இந்தியா, சீனா, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து குறுகிய காலத்திற்கு கடன் பெறுவதால் இந்த பிரச்சினையை தீர்க்க முடியாது என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »