Our Feeds


Tuesday, February 8, 2022

SHAHNI RAMEES

பிரதமரின் திருப்பதி விஜயம் : மஹிந்தவிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை!

 

தனிப்பட்ட ஜெட் விமானம் மூலம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் திருப்பதிக்கு விஜயம் செய்தமை குறித்து விசாரணைகளை மேற்கொள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இலஞ்ச ஒழிப்பு சட்டத்தை மீறி தனியார் ஜெட் விமானத்தை பரிசாக ஏற்றுக்கொண்டதன் மூலம் பிரதமர் லஞ்சம் பெற்றாரா என்பதை உறுதி செய்யும் வகையில் விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது.

2021 டிசம்பர் 31 ஆம் திகதி ஊடகவியலாளர் தரிந்து உடுவகெதரவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜெட் விமானம் மூலமான பயணம் குறித்த செய்திகள் பரவியதை அடுத்து, பிரதமரின் நெருங்கிய சகா ஒருவரால் இது பரிசளிக்கப்பட்டது என பிரதமரின் தலைமை அதிகாரி யோஷித ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »