Our Feeds


Tuesday, February 8, 2022

SHAHNI RAMEES

பெற்றோலிய கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலையை அதிகரிக்கக் கூடும்! - டலஸ் அழகப்பெரும

 

இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளமையின் காரணமாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலையை அதிகரிக்கக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் பெற்றோல் 92 ஒக்டெய்னின் விலை 7 ரூபாவாலும் ஓட்டோ டீசலின் விலை 3 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டது. அதற்கமைய பெற்றோல் 92 ஒக்டெய்னின் புதிய விலை 177 ரூபாயிலிருந்து 184 ரூபா என்றவாறும், ஓட்டோ டீசலின் விலை 121 ரூபாயிலிருந்து 124 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் இவ்வாரத்தில் எரிபொருள் விலையை அதிகரிக்குமா என்று இன்று (08) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்க்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கும்போதே அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேற்கண்டவாறு பதிலளித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »