Our Feeds


Thursday, February 17, 2022

ShortNews

விமல், கம்மன்பில உள்ளிட்ட அரசின் பங்காளிகள் அவசர சந்திப்பு. - காரணம் என்ன?

 

அரசாங்கத்தின் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகளின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அவசர சந்திப்பொன்று அமைச்சர் விமல் வீரவங்சவின்  இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த சந்திப்பில் நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பாரதூரமான பிரச்சினைகள் தீர்ப்பது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.


 
இதனடிப்படையில், அந்த பிரச்சினைகள் தொடர்பில் யோசனைகளை தயாரித்து எதிர்வரும் 2 ஆம் திகதி அரசாங்கத்திடம் கையளிக்க இந்த அணியினர் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக மற்றுமொரு சந்திப்பை அமைச்சர் விமல் வீரவங்ச அல்லது உதய கம்மன்பில ஆகியோரது வீட்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »