வெளிநாடு செல்லும் நபர்களுக்கு அந்தந்த நாடுகளின் தேவைக்கேட்ப நான்காவது கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், அதனை பெற்று்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளாா்.
அதற்கமைய, அவுஸ்திரேலியாவுக்கு உயர் கால்விக்காக சென்ற மாணவர்கள் சிலருக்கு, இந்த தடுப்பூசி பெற்றுக்கொடுக்கப்பட்டதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
சம்பந்தபட்ட நாடுகளில் அனுமதிக்கப்பட்டுளு்ள கொரோனா தடுப்பூசி மற்றும் தடுப்பூசி வேலைத்திட்டம் தொடர்பில் விசேட நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சு தெளிவுப்படுத்தியுள்ளதாகவும் சுகாதார மேம்பாட்டு பணியகம் குறிப்பிட்டுள்ளது.