Our Feeds


Thursday, February 10, 2022

ShortNews

சண்முகா இந்துக் கல்லூரி அபாயா சர்ச்சை - மு.க தலைவர் ஹக்கீமை கொழும்பில் சந்தித்தார் பஹ்மிதா ஆசிரியை



திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி ஹபாயா சர்ச்சையில் பாதிக்கப்பட்ட ஆசிரியை பஹ்மிதா ரமீஸ் நேற்று (09) ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை சந்தித்துள்ளார்.


இச்சந்திப்பு கட்சித் தலைமையகம் தாருஸ்ஸலாமில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, பாதிக்கப்பட்ட ஆசிரியை நீதிமன்றத்தை நாடிய போது மீண்டும் அதே பாடசாலைக்கு பணியமர்த்தியமை தொடர்பில் ஆராயப்பட்டதுடன் மேல் நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் தற்போதைய நிலவரம், மாகாண கல்வி அமைச்சினால் அனுப்பப்பட்டுள்ள கடிதங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் இது தொடர்பில் தொலைபேசி ஊடாக மாகாண கல்விப் பணிப்பாளரை தொடர்புகொண்டு உரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இக் கலந்துரையாடலின்போது கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »