Our Feeds


Wednesday, February 2, 2022

ShortNews

கறுப்புச் சந்தை டொலர்களைப் பயன்படுத்தி ஆயுதக் கொள்வனவு ; குற்றச்சாட்டை மறுத்த இலங்கை

 


கறுப்புச் சந்தை டொலர்களைப் பயன்படுத்தி வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை இலங்கை மறுத்துள்ளது.

அத்துடன் 2022.31.ஜனவரி திகதியிடப்பட்ட “கருப்புச் சந்தை டொலர்களைப் பயன்படுத்தி வட கொரியாவிலிருந்து ஆயுதங்களை வாங்கினோம்’ – அமைச்சர் பசில் ஆர்” என்ற தலைப்பில் முன்னணி இணையதளத்தில் வெளியான செய்தியின் மீது வெளியுறவு அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தனது அமைச்சரவை சகாவுடன் பேசியதாகவும், குறித்த செய்தியில் தமக்கு எதிராக கூறப்பட்ட கருத்துக்களை திட்டவட்டமாக மறுத்துள்ளவும் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ கூறியுள்ளார் என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »