Our Feeds


Friday, February 11, 2022

SHAHNI RAMEES

ரஞ்சனின் ராமனாயக்கவின் அனைத்து ஆடியோக்களும் வெளிவருமா?

 

முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டால் அவரது தொலைபேசியில் உள்ள அனைத்து ஒலிப்பதிவுகளையும் பகிரங்கப்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யக்கோரும் நபர்கள், தவறு செய்து சிறையில் அடைக்கப்படுவதை விரும்பாதவர்களே எனவும், அதனாலேயே ரஞ்சனை விடுதலை செய்ய வேண்டும் என்ற கருத்து நிலவுவதாகவும் பிரமித பண்டார எம்.பி சுட்டிக்காட்டினார்.

ரஞ்சன் ராமநாயக்க நீதித்துறைக்கு எதிராக வெளியிட்ட கருத்துக்களின் பாரதூரத்தை நாட்டு மக்கள் அறிய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உண்மையைக் கூறியதற்காக ரஞ்சன் ராமநாயக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறினார்.

எனவே, ரஞ்சன் ராமநாயக்க பொலிஸ் மற்றும் நீதித்துறை மீது பிரயோகிக்கப்பட்டுள்ள அழுத்தங்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமெனவும், அவரது அனைத்து குரல் பதிவுகளையும் சமூகமயப்படுத்துவதன் ஊடாக அறிந்து கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »