Our Feeds


Friday, February 18, 2022

ShortNews

BREAKING: அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு: `குற்றவாளிகள் 49 பேரில் 38 பேருக்கு தூக்கு!’ - சிறப்பு நீதிமன்றம்



2008ம் ஆண்டு நடந்த அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 38 பேருக்கு மரண தண்டனை விதித்து அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.


குஜராத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான அகமதாபாத்தில் கடந்த 2008- ம் ஆண்டு, சுமார் 70 நிமிட இடைவெளியில் 21 வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இந்த தொடர் தாக்குதலால் 56 பேர் கொல்லப்பட்டனர். 204 பேர் காயமடைந்ரதனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அகமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கிய இந்த வழக்கின் விசாரணை, கடந்த ஆண்டு செப்டம்பரில் நிறைவடைந்தது. குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் தண்டனை குறித்த விவரம் இன்று அறிவிக்கபட்டது.


இந்த வழக்கில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட 49 பேரில் 38 பேருக்கு தூக்கு தண்டனையும், மேலும் 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »