2021 க்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ள காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கும் ஊடக அறிக்கை ஒன்றை கல்வியமைச்சு இன்று வெளியிட்டுள்ளது
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையை முன்னிட்டு பெப்ரவரி 7 முதல் மார்ச் 7ஆம் திகதி வரை சகல அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வியமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.