Our Feeds


Monday, February 14, 2022

ShortNews

தாய் Game” விளையாட கைத்தொலைபேசியைக் கொடுக்க மறுத்ததால் 12 வயது சிறுவன் தற்கொலை !

 

12 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் தனது தாய் கைத்தொலைபேசியைக் கொடுக்க மறுத்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவமொன்று அனுராதபுரம் தஹயியாகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் அனுராதபுரம் புனித சூசையப்பர் கல்லூரியின் ஏழாம் தர மாணவர் என அடையா ளம் காணப்பட்டுள்ளார்.

கைத்தொலைபேசியில் “Game” விளையாடும் பழக்கம் கொண்ட குறித்த மாணவன் கடந்த 11ஆம் திகதி பாடசாலையைத் தவறவிட்டதால் அவரது தாயார் சிறுவனைத் திட்டிவிட்டு, கைத்தொலைபேசியை பறித்துச் சென்றுள்ளார்.

இதனால் கோபமடைந்த சிறுவன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இணையம் ஊடாக கற்றலின் போது தாயாரின் கைத்தொலைபேசியை பயன்படுத்திய குறித்த மாணவன் “Game” விளையாட்டில் ஈடுபட்டதாகத் தெரியவருகிறது.

சிறுவனின் தாயார் அரசாங்க நிறுவனத்தில் எழுதுவினைஞராகவும் தந்தையார் தனியார் பஸ் நிறுவன ஊழியராகவும் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »