Our Feeds


Wednesday, February 2, 2022

ShortNews

நாடு மீண்டும் லொக்டவுன் செய்யப்படுமா? - GMOA கடும் எச்சரிக்கை



நாடு முழுவதும் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பானது, நாட்டை முடக்க வேண்டிய சூழ்நிலைக்கும் இட்டுச் செல்ல வாய்ப்புள்ளதாக அரச மருத்து அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரித்துள்ளது.


கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அதன் மத்தியக் குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

கொரோனா கட்டுப்பாட்டுக்கு அரசாங்கமும் பொறுப்புடைய தரப்பினரும் உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »