Our Feeds


Wednesday, February 2, 2022

ShortNews

500 கர்பிணிகளுக்கு கொரோனா - கர்பிணித் தாய்மார்க்களுக்கு சுகாதாரத் துறையின் முக்கிய அறிவிப்பு.



கொரோனா தொற்றுக்குள்ளாகிய 500 கர்ப்பிணிப் பெண்கள் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


ஒமிக்ரோன் வைரஸ் தொற்றினால், இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குடும்பநல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர், வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.

கர்ப்பிணித் தாய்மார்கள் இயலுமானவரை விரைவாக பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், சன நெரிசல் அதிகமுள்ள இடங்கள் மற்றும் அனாவசியமாக பயணங்களைத் தவிர்க்குமாறு கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வைத்தியர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »