Our Feeds


Thursday, February 3, 2022

SHAHNI RAMEES

ISIS அமைப்பின் தலைவர் கொலை! உறுதி செய்தது அமெரிக்கா

 

சிரியாவில் ஒரே இரவில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து ISIS பயங்கரவாத அமைப்பின் தலைவர் உயிரிழந்ததாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஐஎஸ்ஐஎல் தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹஷிமி அல் குரைஷி (Abu Ibrahim al-Hashimi al-Qurayshi) கொல்லப்பட்டதாக அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


 
இந்த நடவடிக்கையின் போது அவர் தன்னைத்தானே வெடிக்கச் செய்து கொண்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

நேற்று இரவு எனது வழிகாட்டுதலின் பேரில், வடமேற்கு சிரியாவில் உள்ள அமெரிக்க இராணுவப் படைகள் அமெரிக்க மக்களையும் நமது நட்பு நாடுகளையும் பாதுகாக்கவும், உலகை பாதுகாப்பான இடமாக மாற்றவும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டன என்று பைடன் அறிக்கையில் கூறினார்.

இந்த தாக்குதலில் அமெரிக்க உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என பென்டகன் கூறியது.


சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க சிறப்புப் படைகளால் கொல்லப்பட்ட முன்னாள் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதியின் மரணத்தை உறுதி செய்த பின்னர் 2019 இல் அல் குரேஷியை ஐஎஸ்ஐஎஸ் அதன் தலைவராக நியமித்தது.

துருக்கிய எல்லைக்கு அருகில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இட்லிப் மாகாணத்தில் உள்ள மக்கள் அடர்த்தியான நகரமான Atmeh இல் இரவு நடந்த சோதனையில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »