Our Feeds


Sunday, February 6, 2022

ShortNews

முன்னாள் MPக்கள் 8 பேருக்கு பாராளுமன்றம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!



அனுமதியின்றி உத்தியோகபூர்வ இல்லங்களில் தங்கியிருந்தமைக்காக செலுத்த வேண்டிய உரிய அபராதத் தொகையை விரைவில் செலுத்துமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8 பேருக்கு நாடாளுமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த பொதுத்தேர்தலில் தோல்வியடைந்த பின் தமது உத்தியோர்கபூர்வ இல்லங்களை விட்டு வெளியேறாது இதுவரையில் அபராதத்தையும் செலுத்ததாத முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எட்டு பேருக்கே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நீர் மற்றும் மின்சாரக்கட்டணங்களையும் உடனடியாக செலுத்துமாறு இரண்டாவது தடவையாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன் இந்த அறிப்புக்களை அவர்கள் புறக்கணித்தால் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலைமை ஏற்படுமென நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.

அனுமதியின்றி உத்தியோர்கபூர்வ இல்லத்தில் ஒருநாள் தங்குவதற்கு 500 ரூபா அபராதம் விதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »