Our Feeds


Monday, February 14, 2022

ShortNews

ராஜபக்ஷ ஆட்சி தொடருமானால் பிரபாகரன், சஹரான், ரோஹன விஜயவீரவினால் கூட இதுவரை செய்ய முடியாத அழிவுகள் இடம்பெறும் - சம்பிக்க ரணவக்க MP



(ஆர்.யசி)


நாட்டின் ஜனநாயக தன்மைகளை முழுமையாக அழித்துவிட்டு மியன்மாரை போன்றதொரு இராணுவ ஆட்சியை கையில் எடுக்கும் சதிகள் மும்முரமாக இடம்பெற்றுக்கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 


நாட்டின் இன்றைய கடன் நெருக்கடிக்கு ஒட்டுமொத்தமாக ராஜபக்ஷவினரே பொறுப்புக்கூற வேண்டும்.  ராஜபக்ஷவினரின் ஆட்சி இனிமேலும் தொடருமானால் பிரபாகரன், சஹரான் அல்லது ரோஹன விஜயவீரவினால் கூட இதுவரை செய்ய முடியாத அளவிற்கு அழிவுகள் இடம்பெறும் எனவும் அவர் கூறினார்.

நாட்டின் நிகழ்கால அரசியல் செயற்பாடுகள் மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் குறித்து தனது நிலைப்பாட்டை முன்வைக்கும் போதே அவர் இதனை கூறினார். 

இந்த நாட்டின் மொத்த கடன்களில் 86 வீத கடன்கள்  ராஜபக்ஷவினர் பெறப்பட்டுள்ளது. ஏனைய சகலரது ஆட்சியிலும் மொத்தமாக 14 வீத கடன்களே பெறப்பட்டுள்ளன. நாட்டின் இன்றைய கடன் நெருக்கடிக்கு ஒட்டுமொத்தமாக ராஜபக்ஷவினரே பொறுப்புக்கூற வேண்டும். 

ஆகவே ராஜபக்ஷவினரை விரட்டியடிக்க சகல எதிர்க்கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தவும், ஆளுந்தரப்பு கூட்டணிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாராகவே உள்ளோம் என்றும் அவர் மேலும் கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »