அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் சைகையை மீறி வேகமாக வந்த கார், வீதியைக் கடந்து வந்த பாடசாலை சிறுமி மீது மோதவிருந்த நிலையில் அவளை தள்ளி விட்டு, காரில் அடிபட்டு விழுந்த போக்குவரத்து பெண் பொலிஸாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
கடந்த 4ஆம் திகதியன்று நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பான CCTV காட்சி வெளியாகி உள்ளது.
பெண் பொலிஸார், cecil கவுண்டி பகுதியில் உள்ள வீதியொன்றில் பணியில் ஈடுபட்டிருந்த போது வீதியின் ஒரு புறத்தில் வந்த வாகனங்களை கைகாட்டி நிறுத்தச் சொல்லிவிட்டு எதிர்ப்புறத்தில் இருந்து வீதியைக் கடக்க காத்து நின்ற பாடசாலை சிறுமியை கடந்து வருமாறு கூறினார்.
ஆனால் அந்த சிறுமி வீதியைக் கடந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக சைகையை மீறி வேகமாக வந்து குழந்தையின் மீது கார் இடிக்க இருந்ததை நொடிப்பொழுதில் சுதாரித்த குட் இயர், அந்த சிறுமியை வேகமாக தள்ளிவிட்டு தான் அடிபட்டு விழுந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது நலமுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.